fbpx

மத்திய அரசு கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை.. 224 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

மத்திய அரசின் கொச்சி கப்பல் கட்டும் (Cochin Shipyard Limited) நிறுவனத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளில் உள்ள 224 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.

பணியிடங்கள் ; தாள் உலோகம் வர்க்கர், வெல்டர், மெக்கானிக் டீசல், மெக்கானிக் மோட்டர் வாகனம், ப்ளம்மர், பெயிண்டர், எலெக்ட்ரிஷன், எலெக்ட்ரிக் மெக்கானிக், இன்ரூமெண்ட் மெக்கானிக், ஃபிட்டர் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் 224 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இதில் 132 இடங்கள் பொதுப் பிரிவினருக்கு, 52 இடங்கள் ஒபிசி இடங்கள், எஸ்சி பிரிவில் 18 இடங்கள், எஸ்டி பிரிவில் 4 இடங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 18 இடங்கள் என மொத்தம் 224 இடங்கள் நிரப்பபடுகிறது.

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 30.12.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 45 வயதைக் கடந்திருக்கக்கூடாது. விண்ணப்பதார்கள் 31.12.1979 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது.

கல்வித் தகுதி : இந்நிறுவனத்தில் உள்ள பல்வேறு தொழில் பிரிவுகளில் பதவிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.

சம்பள விவரம் : இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.23,000 சம்பளம் வழங்கப்படும். மேலும், கூடுதல் பணி நேரத்திற்கு மாதம் ரூ.5,830 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் வழியாக தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cochinshipyard.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும்

Read more ; பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 எப்போது கிடைக்கும்..? கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்..!!

English Summary

Central Government Cochin Shipyard Limited invites applications for 224 vacancies in various industries.

Next Post

புஷ்பா 2 பார்க்க வராத காதலன்.. மூன்றாவது மாடியில் இருந்து குதித்த காதலி..!! அல்லு அர்ஜுன் படத்துக்கு வந்த புது சிக்கல்..

Mon Dec 23 , 2024
In the state of Uttar Pradesh, a woman committed suicide when her boyfriend did not come to watch Pushpa 2.

You May Like