fbpx

பொங்கல் பண்டிகை..!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை..!! செம குஷியில் மாணவர்கள்..!!

பொங்கல் பண்டிகை என்றாலே பொதுவாக 3, 4 நாட்கள் விடுமுறை இருக்கும். ஆனால், இம்முறை தொடர்ந்து 6 நாட்களுக்கு விடுமுறை வர இருக்கிறது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான ஜனவரி 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 25ஆம் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ

அடுத்தபடியாக வழக்கம் போல ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்கிழமை தை பொங்கல், ஜனவரி 15ஆம் தேதி புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16ஆம் தேதி வியாழன் உழவர் திருநாள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதற்கு முன்னதாக ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடுகிறது.

இப்படி பார்க்கையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசனம் திருவிழா முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், 6 நாட்களுக்கு மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. மற்ற வட்டங்களுக்கு 3 நாள் விடுமுறைக்கு இருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 6 நாட்கள் விடுமுறை வர இருக்கிறது. இதனால் மாணவர்கள் செம குஷியில் உள்ளனர்.

Read More : ”ஐய்யோ விடாம துரத்துறாங்களே”..!! போலீஸ் முன் இன்று ஆஜராகிறார் அல்லு அர்ஜுன்..!! அந்த வீடியோ வெளியானதால் அதிரடி ஆக்‌ஷன்..!!

English Summary

While other districts have a 3-day holiday, Ramanathapuram district will have a 6-day holiday. Due to this, students are very happy.

Chella

Next Post

இனிப்பான செய்தி!. பொங்கலுக்கு ட்ரிபுள் ஜாக்பாட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 இலவசம்!. என்ன தெரியுமா?

Tue Dec 24 , 2024
Pongal: தமிழர் திருநாளம் தை திருநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கி வருகிறது. தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாட ரேஷன் கடையில் பச்சரிசி, வெள்ளம், சர்க்கரை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பரிசாக வழங்கப்படும். கொரோனா காலத்துக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த […]

You May Like