fbpx

கணவன் வீட்டில் குடும்பத்தினர், தோழிகள், உறவினர்களுடன் செட்டிலான புதுமணப்பெண்..!! இதெல்லாம் ரொம்ப கொடுமை..!! விவாகரத்து வழங்கியது ஐகோர்ட்..!!

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2005 டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் கையோடு மனைவி தன்னுடைய தாயார், தோழி ஆகியோரை கணவரின் இல்லத்திற்கு அழைத்து வந்து தங்கினார். மாமியார் மற்றும் மனைவியின் தோழி ஓரிரு நாளில் வீட்டை விட்டு செல்வார்கள் என்று பார்த்தால் அதற்கு வழியே இல்லை.

மாறாக தோழியின் நண்பர்கள், உறவினர்கள், மனைவியின் உறவினர்கள் என பெரிய பட்டாளமே வந்துள்ளது. சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. கேட்டால் விருப்பம் இல்லை என்று மனைவியிடம் இருந்து பதில் வருகிறதாம். ஆனால், கணவனின் அத்தனை வசதிகளையும் மனைவி, அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி தோழி, தோழியின் குடும்பத்தினர், நண்பர்களும் அனுபவித்து வந்துள்ளனர்.

இதனால் வெறுத்துப்போன கணவர் 2008ஆம் ஆண்டு விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த சமயத்தில் அவர் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோலாகாட்டில் தங்கியிருந்தார். அவரது கொல்கத்தா இல்லத்தில் மனைவி, மாமியார், அவரது தோழி உள்ளிட்டோர் தங்கியுள்ளனர். ஆனால், மனைவி கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் தொடர்ந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கணவனுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். அந்த தீர்ப்பில், “தாம்பத்ய வாழ்க்கைக்கு திரும்பக்கூடாது என்று மனைவி நினைத்து தனது தாய், தோழி ஆகியோரை தன்னுடன் வைத்திருந்த செயல் கொடுமையானது. மேலும், அவரது குடும்பத்தினரை கணவர் மீது திணிப்பது கொடுமை ஆகும். அதோடு விடாமல் அவர் கொடுமைப்படுத்தியதாக போலீசில் பொய் புகார் அளித்தது அதை விட கொடுமை.

இந்த வழக்கில் கணவருக்கு ஆதரவாக விவாகரத்து வழங்க விசாரணை நீதிமன்றம் மறுத்தது மிகவும் தவறானது. இந்த வழக்கில் மனைவியால் கணவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், மனைவி குடும்பத்தினர் தொடர்ந்து அவரது வீட்டிலேயே தங்கியுள்ளனர். ஆனால் அவர் தனியாக தங்கியுள்ளார். கணவரின் இல்லத்தில் தனது தோழி, குடும்பத்தினரை மனைவி தொடர்ந்து தங்க வைத்திருப்பது பதிவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.

மனைவி வீட்டில் இல்லாத நாட்களிலும் அவரது குடும்பத்தினர், அவரது தோழி ஆகியோர் தங்கியிருந்தது மிகப்பெரிய கொடுமை. மேலும், கணவனுடன் தாம்பத்திய வாழ்க்கைக்கு மறுப்புத் தெரிவிக்கும் முடிவை மனைவி ஒருதலைப்பட்சமாக எடுத்துள்ளார். கணவருடன் குடும்பம் நடத்தாமல், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரது இல்லத்தில் தனது குடும்பத்துடனும், தனது தோழியுடனும் தங்கியிருந்து கொடுமைப்படுத்தியதன் மூலம் இனி கணவனும், மனைவியும் தொடர்ந்து ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை. எனவே, இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. அவர் மீது மனைவி கொடுத்த புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

Read More : பொங்கல் பண்டிகை..!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை..!! செம குஷியில் மாணவர்கள்..!!

English Summary

The trial court’s refusal to grant a divorce in favor of the husband in this case was highly erroneous.

Chella

Next Post

இந்தியாவின் புதிய ரெக்கார்ட்!. ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம்!. 2025 ஏப்ரலில் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்!

Tue Dec 24 , 2024
Jewar Airport: உத்தர பிரதேசம் ஜெவாரில் கட்டப்பட்டு வரும் ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம் வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்த பெரிய விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் பத்தாயிரம் கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த விமான நிலையம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரெக்கார்டை படைத்துள்ளது. Jewar சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமான […]

You May Like