fbpx

”இப்படி சமைத்தால் வீட்டில் சமைக்கக் கூடிய உணவுகளும் ஆபத்து தான்”..!! ஆரோக்கியமாக சமைப்பது எப்படி..?

வீட்டில் சமைக்கக் கூடிய உணவுகளும்கூட எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

வீட்டில் சமைக்கும் எந்த வகையான உணவுகளும் ஆரோக்கியமான ஒன்றுதான் என்பது அனைவராலும் முன்வைக்கப்படும் ஒரு கருத்து. அதற்கு காரணம் குறைவான எண்ணெய், சுகாதாரமாக தயாரிப்பது, புதிய பொருட்களை பயன்படுத்தி சமைப்பது ஆகியவை தான். ஆனால், வீட்டில் சமைக்கப்படும் உணவுகளும் கூட ஆரோக்கியமானதாக இருப்பதில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.

ஐசிஎம்ஆரின் படி, அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிரம்பிய உணவில் ஆற்றல் அடர்த்தி என்பது அதிகமாக இருக்கும் .(ஆற்றல் அடர்த்தி என்பது ஒரு கிராம் உணவில் உள்ள கலோரிகளின் அளவு.) அதாவது, கலோரிகள் அதிகமாக இருக்கும். எனவே, இந்த வகையான உணவுகளை தொடர்ந்து சாப்பிடும்போது உடல் பருமன் அதிகரிக்கிறது. அதேசமயம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் புரதம், வைட்டமின்கள், நார்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் சரிவர உடலுக்கு கிடைப்பதில்லை.

நிபுணர்களின் கூற்றுபடி, உணவை சுவையாக வைத்திருக்க அதிகளவு எண்ணெய், சர்க்கரை, பட்டர், மசாலாப் பொருட்களை அதிகமானோர் சேர்க்கிறார்கள். பூரி போன்ற உணவுகள் அதிகளவு எண்ணெய்யில் பொரிக்கப்படுவதால், உடல் எடை பிரச்சனைகள், டைப் 2 நீரிழிவு, இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், உணவு சமைக்க பதப்படுத்தப்பட்ட இஞ்சி , பூண்டு பேஸ்ட், தக்காளி பியூரி போன்றவற்றை பலரும் சேர்க்கிறார்கள். இவற்றில் நச்சுத்தன்மையை விளைவிக்கக்கூடிய நிறமிகள் சேர்க்கப்படுகிறது.

மேலும், இதனை வீடுகளில் பயன்படுத்தி சமைக்கும்போது வீட்டு உணவு ஆரோக்கியமற்றதாக மாறுகிறது. அடுத்தபடியாக, காய்கறிகளை அதிக வெப்பநிலையில் வைத்து சமைத்து Over Cooking செய்யும்போது, அது காய்கறிகளில் இருக்கக்கூடிய சத்துக்களை அகற்றுகிறது.

வீட்டில் சமைக்கும் உணவுகளை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?

* சமைப்பதற்கு கடுகு எண்ணெய் மற்றும் நெய்யை பயன்படுத்தலாம்.

* உணவை டீப் ஃப்ரை செய்வதற்கு பதிலாக கிரில், பான் ஃப்ரையிங் , ஏர் ஃப்ரையிங் செய்யலாம்.

* நீங்கள் அரிசி சாப்பிடுபவர்கள் என்றால், பிரியாணி அல்லது புலாவ் ஆகியவற்றுக்கு Steamed Rice அல்லது Brown Rice போன்றவற்றை பயன்படுத்தலாம். சாதத்துடன் சாப்பிடுவதற்கு பருப்பு மற்றும் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். மேலும், பரோட்டா, நான் போன்றவற்றிக்கு பதிலாக சப்பாத்தியை சாப்பிடலாம்.

* அதிகளவு மசாலாப் பொருட்களை சேர்ப்பதற்கு பதிலாக Herbs மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

* ஆரோக்கியமான உணவுகளை கூட சரியான விகித்ததில் சாப்பிடவில்லை என்றால், அதுவே உடலுக்கு ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்.

* குறிப்பாக, இரவு உணவுக்கு நாம் விரும்பும் உணவின் அளவை விட சற்று குறைவாகவே சாப்பிடலாம்.

Read More : கணவன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்திய மனைவி..!! மேயர் குடும்பத்தில் நடந்த பயங்கரம்..!!

English Summary

Even home-cooked meals are not always healthy, according to the ICMR.

Chella

Next Post

ரயிலில் Unreserved டிக்கெட்டை ரத்து செய்யலாமா.. அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

Wed Jan 1 , 2025
Do you know how to cancel a railway general ticket?

You May Like