fbpx

4 பேர் மரணம்..!! ரத்த வெள்ளத்தில் துடித்த பக்தர்கள்..!! எதையும் கண்டுகொள்ளாமல் சிதறி கிடந்த 16 டன் காய்கறிகள் அள்ளிச் சென்ற மக்கள்..!!

மேல்மருத்துவரில் சாமி தரிசனம் செய்துவிட்டு கர்நாடக நோக்கி சென்றுக்கொண்டிருந்த பக்தர்கள் பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஆனல், இதை எதையும் பொருட்படுத்தாமல் சாலையில் கொட்டிக் கிடந்த 16 டன் காய்கறிகளை மூட்டைமூட்டையாக அப்பகுதி மக்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முன்பாகல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர், சாமி தரிசனம் முடித்துவிட்டு, 4 பேருந்துகளில் புதன்கிழமை இரவு ஊர் திரும்பி உள்ளனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சென்னை – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் செல்லும்போது பக்தர்கள் சென்ற ஒரு பேருந்தும், ஆந்திராவில் இருந்து வந்த ஈச்சர் வேனும் நேருக்கு நேர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பக்தர்கள் பயணித்த பேருந்தும் காய்கறி வாகனமும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல் இந்த விபத்தில் காய்கறி வாகனம் கவிழ்ந்ததில் சுமார் 16 டன் காய்கறிகள் சாலையில் கிடந்தன. இதை மூட்டை மூட்டையாக அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்.

Read More : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எதிரொலி..!! பொங்கல் பரிசுத் தொகுப்பு ரத்து..!! ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்..!!

English Summary

In this accident, a vegetable truck overturned, leaving about 16 tons of vegetables on the road. Locals collected them in bundles.

Chella

Next Post

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தடை போட்ட ஐகோர்ட்..!! சந்தோஷத்தில் குதிக்கும் எடப்பாடி பழனிசாமி..!!

Thu Jan 9 , 2025
The High Court ordered an interim stay on the Election Commission's investigation, stating that the Election Commission could not conduct an investigation.

You May Like