fbpx

ரூ.62,000 சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. பெண் பொறியாளர்களுக்கு அழைப்பு…!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தகுதியும் அனுபவமும் வாய்ந்த பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பிரநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு வயது வரம்பு 08.01.2025 தேதியின்படி, அதிகபடியாக 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது. மேலும், மாற்றத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் சிவில் பாடப்பிரிவில் B. E / B. Tech முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் அனுபவம் தேவை.

சம்பள விவரம் : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்படும் உதவி மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.62,000 தொகுப்பூதியமாக அளிக்கப்படும். இவை தவிர, விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் இதர செலவினங்கள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் இரண்டு கட்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நேர்காணல் நடத்தப்படும். நேர்கானலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்தினால் போதும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு 044-24378000 என்ற எண்ணிற்கு அலுவலக வேலை நாட்களில் தொடர்புகொள்ளலாம்.

Read more ; 100 மாவட்ட செயலாளர்கள்..!! இறுதி செய்த தவெக..? நேரில் சந்திக்கிறார் விஜய்..!! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

English Summary

Job in Chennai Metro Rail Company with a salary of Rs.62,000.. Calling for female engineers

Next Post

குடும்ப அட்டைதாரர்கள் யாரும் இந்த 2 நாட்களில் ரேஷன் கடைக்கு போகாதீங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Fri Jan 10 , 2025
To compensate for these working days, ration shops have been declared closed on January 15th and 22nd.

You May Like