fbpx

போலீஸ் பாதுகாப்பில் இருந்து தனது மகளை ஆணவக் கொலை செய்த கொடூர தந்தை..!! துப்பாக்கியால் சுட்டதில் துடிதுடித்து பலி..!!

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் கோலா கா மந்திர் எனும் பகுதியைச் சேர்ந்த தணு குர்ஜார் (20) என்ற பெண், உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த விக்கி மாவாய் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தந்தை, அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் ஜன.18ஆம் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (ஜன.14) அந்த பெண், தனது சமூக வலைதள பக்கத்தில், வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், டவிக்கியை காதலிப்பதாகவும், தனது குடும்பத்தினர் தன்னை வற்புறுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு தனது தந்தை மஹேஷ்தான் காரணம் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

நேற்றிரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அப்பகுதி பஞ்சாயத்து அதிகாரிகள் முன்னிலையில் இருத்தரப்புக்கும் சமரசம் செய்ய முயற்சித்தனர். அப்போது, அந்த பெண் தனது உயிரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரது வீட்டில் தங்குவதற்கு மறுத்து அரசின் பெண்கள் நலக்கூடத்தில் சேர விரும்புவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, அவரது தந்தை தனது மகளிடம் பேச வேண்டும் எனக் கூறி அந்த அவரை தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் தனது மகளின் நெஞ்சில் சுட்டுள்ளார். அவருடன் உறவினரான ராஹுல் என்பவரும் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குற்றவாளிகள் இருவரும் காவல்துறையினர் மற்றும் தங்களது குடும்பத்தினரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தப்பிச் செல்ல முயன்றனர்.

இதில், மஹேஷ் கைது செய்யப்பட, அவரது உறவினரான ராஹுல் தப்பித்து சென்றுள்ளார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய மற்றொரு குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த பெண்ணின் சமூக ஊடக கணக்குகளை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : அமைச்சர் மீது சேற்றை வாரி வீசிய விவகாரம்..!! நடுரோட்டில் பெண்களிடம் அத்துமீறிய போலீஸ்..!! தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்..!!

English Summary

He shot his daughter in the chest with a concealed country-made gun.

Chella

Next Post

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை.. 4,576 காலிப்பணியிடங்கள்.. இந்த தகுதிகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்..!!

Wed Jan 15 , 2025
The notification for the general recruitment examination to fill the vacancies in all AIIMS Hospitals has been released.
job career

You May Like