fbpx

டிகிரி போதும்.. மாவட்ட புள்ளியியல் அலுவலகத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

மாவட்ட புள்ளியியல் அலுவலகத்தில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி: பொறியியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளிவிவரத்தில் இளங்கலைப் பட்டம் (4 ஆண்டு படிப்பு மட்டும்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கலை அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர் எனில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது தொடர்புடைய பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்‌.

எப்படி விண்ணப்பிப்பது? அதிகாரப்பூர்வ இணையதளமான https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ இருந்து விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அதனைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ / தபால் / மின்னஞ்சல் மூலம் 23.01.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மொத்தமாக ஒரேயொரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ள நிலையில், தகுதி வாய்ந்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாகத் தகுதி அடிப்படையில் மாதம் 50,000 ரூபாய் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது

Read more ; சொதப்பிய ஹமாஸ்.. 3 மணிநேரம் தாமதத்திற்கு பிறகு அமலுக்கு வந்தது காசா போர் நிறுத்தம்..!!

English Summary

The District Statistics Office is going to fill the vacant post of Young Professional.

Next Post

மனுபாக்கர் வீட்டில் சோகம்.. துடிதுடித்து பலியான இரண்டு உயிர்கள்..!! என்ன நடந்தது..?

Sun Jan 19 , 2025
Paris Olympics Medallist Manu Bhaker's Grandmother, Uncle Die In Road Accident In Haryana

You May Like