fbpx

திருமணம் செய்யாமல் லிவிங் டூகெதர்ல சேர்ந்து வாழப் போறீங்களா..? தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய சட்டங்கள் இதோ..

பாலியல் உறவு திருப்தியாக இல்லையா..? இந்த புதிய முயற்சியை ட்ரை பண்ணி பாருங்க..!!

திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்வது லிவிங் டூ கெதர். ஒரு காலத்தில் வெளி நாடுகளில் மட்டும் இருந்த இந்த கலாச்சாரம் தற்போது நம் நாட்டிலும் வளர்ந்து வருகிறது. ஆனால் ஒன்றாக வாழ்பவர்கள் கண்டிப்பாக மூன்று சட்டங்களை அறிந்திருக்க வேண்டும் என்கின்றனர் உறவுமுறை நிபுணர்கள். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காதலிக்கும் தம்பதிகள் திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒன்றாக வாழ்வது சமீபகாலமாக சர்வ சாதாரணமாகிவிட்டது.  இந்த பாரம்பரியம் இந்தியாவிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் சில சட்டங்கள் இணைந்து வாழ்வதற்கும் பொருந்தும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

திருமணமான தம்பதிகளைப் போன்ற சட்டப்பூர்வ உரிமைகள் இணைந்து வாழும் பாட்னருக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் பிரிந்தால், ஒருவருக்கொருவர் சொத்துக்களில் உரிமை இல்லை.  வாழ்வாதாரத்திற்காக எந்த கோரிக்கையும் வைக்க உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

ஒன்றாக வாழ்வதில் பிறந்த குழந்தைகளின் உரிமைகள் : இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் பிறந்தால், அந்த குழந்தைகளும் திருமணமான தம்பதிகளின் குழந்தைகளுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் பெறுகிறார்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. திருமணத்தில் என்ன உரிமைகள் இருக்கிறதோ, அதுவும் இணைந்து வாழ்வதில் இருக்கிறது. 

குடும்ப வன்முறைச் சட்டம், 2005 இன் கீழ் பாதுகாப்பு : லிவிங் டூகெதர் உறவில் குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்பட்டால் சட்டங்கள் பொருந்தாது என்று சிலர் அவநம்பிக்கை கொள்கின்றனர். ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை.  ஒரு பெண் குடும்ப வன்முறைக்கு ஆளானால், குடும்ப வன்முறைச் சட்டம், 2005ன் கீழ் பாதுகாப்புப் பெறலாம். இந்த சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும்.  நீங்கள் குடும்ப வன்முறைக்கு ஆளானால், நீங்கள் சட்டப்பூர்வ புகாரைப் பதிவு செய்யலாம்.

பொய் வழக்குகளைத் தவிர்ப்பது எப்படி? ஒன்றாக வாழ்வதில் தவறான வழக்குகளில் சிக்குவதைத் தவிர்க்க, உரையாடல்களும் செயல்களும் எழுத்துப்பூர்வமாக அல்லது வேறு எந்த வடிவத்திலும் பதிவு செய்யப்பட வேண்டும். உங்கள் பாட்னர் உங்களை அச்சுறுத்தினால், உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும். திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும், தம்பதிகள் முதலில் இந்த சட்டங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்கின்ரனர் சட்ட வல்லுநர்கள்.

Read more ; மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்து.. அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்..!!

 

English Summary

Does the law protect a cohabiting woman if she is subjected to domestic violence?

Next Post

மகிழ்ச்சி...! அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து...! அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

Thu Jan 23 , 2025
Aritapatti tungsten mine auction cancelled...! Annamalai official announcement

You May Like