fbpx

ஸ்டாலினுக்கு வன்னியர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்.. இல்லையென்றால் அவர்கள் மனிதர்களே அல்ல..!! – அமைச்சர் பேச்சால் சலசலப்பு

விழுப்புரத்தில் கட்டப்பட்டுள்ள வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கும் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் மணிமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் ’ஏ.ஜி’ என்ற இரண்டு எழுத்துக்கு தனி மரியாதை உண்டு. ஏ.ஜி அவர்கள் சமுதாயத்தை வைத்து பிழைக்கத் தெரியாதவர். பிறரை கெடுக்கத் தெரியாதவர். ஏழையாகவே பிறந்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழை அமைச்சராகவே இறந்து போனவர். அதனால்தான் இன்றும் முகையூர், விக்ரவாண்டி பகுதிகளில் அவருக்குள்ள மரியாதையை நான் பார்த்திருக்கிறேன்.

சட்டநாதன் கமிஷன் மூலம் எம்பிசி என்று மாற்றப்பட்டதால் இன்று பலர் முன்னேறி உள்ளனர். ஏ.ஜி.அவர்கள் வீட்டிலேயே 2 அல்லது 3 பேர் வரை ஐஏஎஸ் அதிகாரிகளாக உள்ளனர். இன்றைக்கு ஏ.ஜி மகன் எந்த கட்சிக்கு போனாலும் ஏ.ஜி மகன்தான், அதை மாற்ற முடியாது அல்லவா. வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல; தென்மாவட்டங்களில் பல சமுதாயங்களின் முன்னேற்றத்திற்கும் கலைஞர் வழிவகுத்து உள்ளார். கலைஞரும், ஸ்டாலினும் ஆற்றி இருக்கும் தொண்டுக்கு, இந்த சமுதாயம் என்றைக்கும் சத்தியவானாக நியாயவானாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மனிதனாகவே இருக்க முடியாது. இதைவிட வேறு எவரும் செய்துவிட முடியாது.

Read more : நீரிழிவு நோய் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா..? – நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..

English Summary

Vanni community should be loyal to Stalin..otherwise they are not human..!! – Uproar by the minister’s speech

Next Post

சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறையே இப்படி பண்ணலாமா..? இது நாடா..? சுடுகாடா..? கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்

Tue Jan 28 , 2025
R.P. Udayakumar said that some police officers' involvement in anti-people activities has created distrust.

You May Like