தென் கொரியாவின் புசானின் மேற்கு முனையில் அமைந்துள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில், 176 பேரை ஏற்றிச் சென்ற AIR BUSAN A321 பயணிகள் விமானம் விமான நிலையத்தில் தீப்பிடித்தது. இதனையடுத்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவின் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஹாங்காங்கிற்கு இன்று இரவு செல்லவிருந்த AIR BUSAN A321 பயணிகள் விமானம், புறப்படுவதற்கு முன்பு இரவு 10:30 மணியளவில், விமானத்தின் வால் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், 169பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் உட்பட 176 பெரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் தீ பிடித்ததை அடுத்து அவசரகால குழுக்கள் உடனடியாக விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் விமானத்தில் இருந்த அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்தனர். இருப்பினும், பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.
மேலும் விமானம் தீப்பற்றியதை அடுத்து, தீயணைப்பு இயந்திரங்கள் அதைச் சுற்றி வளைத்தல், விமானத்தின் உடலில் இருந்து புகை வெளியேறுவதையும், அதன் வெளியேற்றும் ஸ்லைடுகள் பயன்படுத்தப்படுவதையும், உள்ளூர் ஊடகங்களில் தீ விபத்து தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது.
Read More: ICC 2024 | சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்றார் ஜஸ்பிரித் பும்ரா..!!