fbpx

Central Bank Of India-வில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.86,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Central Bank Of India-வில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று Central Bank Of India. இந்த வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாகவுள்ள கிரெடிட் ஆஃபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர் : கிரெடிட் ஆபிசர்

காலியிடங்கள் : 1,000

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு : 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளமாக கிடைக்கும்.

தேர்வு செய்யப்படும் முறை :

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஆன்லைன் டெஸ்டில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடங்கள் :

தேர்வு மையங்கள் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.02.2025

கூடுதல் விவரங்கள் : https://www.centralbankofindia.co.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Read More : சென்னையில் வேலை..!! மாதம் ரூ.60,000-க்கு மேல் சம்பளம்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

An employment notification has been issued to fill vacant posts at the Central Bank of India.

Chella

Next Post

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிரடி மாற்றம்..!! கோவை, தேனிக்கு புதிய ஆட்சியர்..!! தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

Sun Feb 9 , 2025
The Tamil Nadu government has ordered the transfer of 38 IAS officers in Tamil Nadu.

You May Like