fbpx

தேர்தலை மனதில் வைத்து பீகாருக்கு மட்டும் அறிவிப்பு..!! தமிழ்நாட்டிற்கு ஏன் இல்லை..? எடப்பாடி பழனிசாமி கேள்வி

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “2025 – 26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும். அதேபோல், உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் மாற்றங்கள் செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

ஆனால், பீகார் மாநிலத்திற்கு தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு – செலவு நிதிநிலை அறிக்கை என கூறலாம். தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை. தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

https://twitter.com/EPSTamilNadu/status/1885617701273620973

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால், இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது. பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : மத்திய பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் தெரியுமா..? அடேங்கப்பா இந்த துறைக்கு இத்தனை லட்சம் கோடியா..?

English Summary

Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget in the Lok Sabha today.

Chella

Next Post

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க.. இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

Sat Feb 1 , 2025
Swelling of the feet during pregnancy.. do this to reduce it

You May Like