தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். சிவாஜியின் மறைவுக்கு பின்னர் எந்தவொரு நடிகராலும் அவரது இடம் நிரப்பப்படாமல் உள்ளது. இனி காலத்திற்கும் இப்படியொரு நடிகர் வரமாட்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அந்த அளவிற்கு, எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதில் கதாபாத்திரமாகவே மாறுவது தான் அவரது ஸ்பெஷல். இதனால் தான் இவரை பலருக்கு பிடிக்கும். குறிப்பாக நடிகைகளுக்கு இவரை மிகவும் பிடிக்கும்.
அப்படி சிவாஜி மீது எல்லை கடந்த அன்பு வைத்திருந்த நடிகைகள் பலர். அதில் குறிப்பாக நடிகை ஒருவர் வைத்திருந்த அன்பு, பலரை வியப்படைய செய்தது. ஆம், சிவாஜி கணேசனுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த ஹீரோயின் பத்மினி தான். இவர் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக, 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதனால் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இதன் காரணமாகவே இருவரைப்பற்றியும் காதல் கிசுகிசுப்புகள் வந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில், பத்மினி சிவாஜியை காதலிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் சிவாஜிக்கு பத்மினி மீது எந்த ஒரு காதலும் இல்லையாம். ஏனென்றால், அவர் திருமணம் செய்த பிறகு தான் நடிகர் ஆகியுள்ளார். இந்நிலையில், ஒரு படத்தில் சிவாஜிக்கும் பத்மினிக்கும் இடையேயான திருமண காட்சிகள் படமாக்கப்பட்டது. அதில் சிவாஜி பத்மினி கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.
அந்த காட்சி எடுக்கப்பட்ட பின்னர், பத்மினி அந்த தாலியை கழட்டவில்லையாம். அவர் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சியை நிஜ திருமணமாகவே பாவித்து, அந்த தாலியை தன் கழுத்திலேயே சில மாதங்கள் கட்டி இருந்துள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் இது குறித்து பத்மினியின் சகோதரிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன பத்மினியின் தாய், தனது மகளுக்கு அட்வைஸ் செய்து தாலியை கழட்ட வைத்துள்ளார்.
இதையடுத்து, பத்மினிக்கு கடந்த 1961-ம் ஆண்டு திருமணம் முடிந்து, தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.