விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வபோது பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் கன்னிசெடி புதூர் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த ஆலையில், திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால், புகைமூட்டம் உண்டானது. இந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More : SBI வாடிக்கையாளர்களை குறிவைக்கும் சைபர் மோசடி..!! சிக்கினால் பணம் அவ்வளவு தான்..!! எச்சரிக்கும் வங்கி..!!