உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பரேலி என்ற பகுதியைச் சேர்ந்த இக்பால் (32) என்பவர் சேலைகளுக்கு ஜரிகை போடும் வேலை பார்த்து வந்துள்ளார். கிராமங்களுக்கு ஜரி வேலைக்காக சென்ற போது இந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். தொடர்ந்து அப்பெண்ணை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்றபோது அப்பெண்ணை கட்டாயப்படுத்தி இக்பால் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளார். மேலும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அடிக்கடி மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, இக்பால் அவரது வீட்டிற்கு அருகில் சடலமாக கிடந்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த பெண்ணை விசாரித்ததில், ”இக்பால் அடிக்கடி மிரட்டியதால் மிகவும் வெறுப்படைந்தேன். எனவே, அவரது வீட்டிற்கு செல்லும்போது நான் சாக வேண்டும். அல்லது இக்பாலை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
அதன்படி, எனது கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்கவைத்துவிட்டு, இக்பால் வீட்டிற்கு சென்றேன். அங்கு இக்பாலுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் உறவு வைத்துக்கொண்டோம். அப்போது, அவரது நெஞ்சில் அமர்ந்து கொண்டேன். பின்னர், இக்பால் வாயை ஒரு கையால் பொத்திக்கொண்டு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் உடலை வீட்டிற்கு வெளியில் இழுத்துக்கொண்டு வந்து போட்டுவிட்டேன்”என்று தெரிவித்துள்ளார்.