புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியிடம் :
1. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) இதற்கு காலிப்பணியிடங்கள் 1 ஆகும். இதற்கு ஒப்பந்த மாத ஊதியம் ரூபாய் 27,804 ஆகும்.
2. சமூகப்பணியாளர் காலிப்பணியிடங்கள் 2. இதற்கு ஒப்பந்த ஊதியம் மாதத்திற்கு ரூபாய் 18,536 ஆகும்.
பாதுகாப்பு அலுவலர் பணிக்கான கல்வித்தகுதி : சமூக பணி/ சமூகவியல்/ குழந்தை வளர்ச்சி/ மனித உரிமை பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொதுசுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்க வேண்டும். அல்லது சமூக பணி/ சமூகவியல்/ குழந்தை வளர்ச்சி/ மனித உரிமை பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொதுசுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் திட்ட உருவாக்கம்/ சமூக நலம்/ பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சியில் செயல்பாடுகள், கண்காணிப்பு, மேற்பார்வை ஆகியவற்றில் இரண்டு வருட பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சமூகப் பணியாளர் பணிக்கான கல்வித்தகுதி : சமூக பணி/ சமூகவியல்/ சமூக அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்க வேண்டும். பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? இதற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://pudukkottai.nic.in/ என்ற முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 07.02.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப முகவரி : விண்ணப்பிக்கும் முகவரி ,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட முன்னாள் படைவீரர்கள் அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1-ஆம் வீதி, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை 622002. தொலைபேசி எண் 04322-221266 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் .
Read more : வரலாற்றை மாற்றிய ஒற்றை கடிதம்.. இந்திய ரயில்வேயில் கழிப்பறைகள் வந்த கதை தெரியுமா..? – சுவாரஸ்ய தகவல் இதோ..