நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. ஏற்கனவே அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறைக்கு சென்றார். இதனால், ஜாமீனில் வெளிவந்த அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஆம் ஆத்மி சார்பில் முதலமைச்சராக அதிஷி இருக்கிறார். இம்மாதத்துடன் டெல்லி சட்டசபை பதவிக் காலம் நிறைவு பெறுகிறது.
இதனால், பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப் பதிவும், 8ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், ஆம் ஆத்மி கட்சி கடுமையான போட்டி அளிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி களத்தில் இல்லை என்பது தான் நிலவரம். தற்போதைய நிலவரப்படி, 70 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 37 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 27 தொகுதியிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகலுக்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
Read More : TCS நிறுவனத்தில் Developer காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!