விழுப்புரம் மாவட்டம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இவரது இரண்டாவது மகள் கோவஶ்ரீ, மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி பள்ளிக்கு செல்லாமல், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி விடுதியில் தனது சக தோழியுடன் இருந்து வந்தார். பின்னர், விடுதியின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கோவஸ்ரீ மீட்கப்பட்டார்.
உடனே, அவரை விடுதி காப்பாளர் ரேவதி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கோவஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவஸ்ரீயின் தாயார் ஸ்ரீவித்யா, தனது மகளை யாரோ கொலை செய்துவிட்டதாகவும், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி கதறி அழுதார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நெல்லிக்குப்பம் போலீசார், பள்ளியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக..? கருத்துக் கணிப்புகளை நிஜமாக்கும் அமோக வெற்றி..!!