தைப்பூச திருநாளை முன்னிட்டு தமிழக த.வெ.க.,தலைவர் விஜய், பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்..
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வாழ்த்து பதிவில், தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள்; முருகப் பெருமானைப் போற்றுவோம்; அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் எனக்கூறியுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எனக்கூறியுள்ளார்.
Read more : மாருதி சுசுகி கார்கள் வாங்க இது தான் ரைட் டைம்.. ரூ.53,100 வரை தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க..!!