வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்க நகையின் தரத்தின் அடிப்படையில் பணத்தை கடனாக நமக்கு தருகின்றனர். 916 நகைக்கு தங்க நகையில் அதிக கடன் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் கிராமுக்கு தற்போது ரூ.5,000 மேல் வழங்கப்படுகிறது. ஒரு பவுன் 916 தங்க நகைக்கு ரூ.40,000 முதல் ரூ.4,50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. நகையின் அன்றைய விலையில் 75% வரை கடன் தரப்படுகிறது.
ஒருவர் 4 சவரன் தங்கத்தை ரூ.1.50 லட்சத்திற்கு அடகு வைக்கிறார் என்றால், அதற்கு வட்டி மட்டும் ஓராண்டிற்கு ரூ.14,000 என்று வைத்துக்கொள்வோம். அந்த பணமும் அடுத்தாண்டில் அசல் பணத்துடன் சேர்ந்துவிடும். அடுத்தாண்டில் 1.50 லட்சம் என்பது 1.64 லட்சம் கடனாக மாறிவிடும். எனவே, வட்டியை மாதந்தோறும் கட்டிவிடுவது நல்லது. மாதந்தோறும் வட்டி கட்ட முடியாது என்றால் 3 மாதத்திற்கு ஒருமுறை வட்டி கட்டிவிடுங்கள்.
வட்டியுடன் அசலுக்கு தேவையான பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டினால் மிகப்பெரிய அளவில் நகைக்கடன் குறைந்துவிடும். அதற்கு மாறாக ஆண்டு இறுதியில் வட்டியுடன் நகையை திருப்பச் சென்றால், கட்ட முடியாத நிலை ஏற்படும். திருப்ப முடியாமல் மறு அடகு வைக்க வேண்டிய நிலை வரும். நகைக்கடன் வாங்கியவர்கள் கண்டிப்பாக ஆட்டோ ரெனிவல் ஆப்சன் போட கூடாது. அப்படி செய்தால் உங்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து வட்டியை கழிக்க தொடங்கிவிடுவார்கள்.
அதேபோல் நகைகயை அடகு வைக்க போகும் முன், முடிந்த வரை கனரா வங்கி, எஸ்பிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளில் வைக்கலாம். ஏனென்றால், இந்த வங்கிகள் தான் வட்டி குறைவாக இருக்கும். பணம் ஓரளவு தான் கிடைக்கும் என்றாலும், வட்டி குறைவாகவே இருக்கும். அதுவே, தனியார் வங்கியில் வைத்தால், மிக குறுகிய காலத்தில் திருப்ப வேண்டும். வட்டி சரியாக கட்டவில்லை என்றால், நகையை இழக்க வேண்டிய சூழல் கூட உருவாகும்.
2 மாதங்களுக்குள் நகையை திருப்ப போகிறேன். கைமாற்று போல் பணம் தேவை என்றால் தனியார் வங்கியில் வைக்கலாம். அதேபோல் அதிக பணம் தேவை என்றாலும் தனியார் வங்கியை அணுகலாம். ஆனால், அந்த பணத்தை உடனே கட்டிவிட முடியும் என்றால் மட்டுமே வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.