fbpx

வந்ததுமே அதிரடி காட்டிய பிரசாந்த் கிஷோர்..!! தவெகவில் புதிதாக ’குழந்தைகள் அணி’ உருவாக்கம்..!! உன்னிப்பாக பார்க்கும் அரசியல் கட்சிகள்..!!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய் பணியாற்றி வருகிறார். இதற்காக சமீபத்தில் 5 கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்தார். இதற்கிடையே, அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் விசிகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விஜய் கட்சியில் இணைந்து கொண்டனர்.

இதையடுத்து, தவெகவின் துணைப் பொதுச் செயலாளராக நிர்மல் குமாரும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னை பனையூரில் கட்சியின் தலைமை அலுவலத்தில் நேற்று (பிப்.10) தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் ஆதவ் அர்ஜுனாவும் இருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவைக்கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோருடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தேர்தல் வியூகங்கள் குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு குடும்பத்திலிருந்து ஒரு வாக்கை உறுதி செய்யுமாறு பிரஷாந்த் கிஷோர் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதற்கேற்ப அடுத்த கட்ட நகர்வுகளுக்கான வியூகம் அமைக்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்களின் வாக்கை குறிவைத்து தேர்தல் வியூகம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி வரிசையில் குழந்தைகள் அணியை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அமைக்க உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி மூன்றாம் பாலினத்தவர்கள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, குழந்தைகள் அணி உள்ளிட்ட 28 அணிகள் இடம்பெற்றுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More : குடற்புழு நீக்க மாத்திரையால் மாணவி மரணமா..? ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM ஸ்டாலின்..!!

English Summary

The list of teams formed in the Tamil Nadu Victory League has been released.

Chella

Next Post

இந்த கிராமத்தில் யாருமே வீட்டில் உணவு சமைப்பதில்லை..!! சிலிர்க்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு இதோ..

Tue Feb 11 , 2025
No one in this village cooks food at home? Do you know why?

You May Like