fbpx

“முத்தம் ஒன்னு தரலாமா”?. இன்று முத்த தினம்!. காதலர்களே கொஞ்சம் இதையும் தெரிஞ்சுக்கோங்க!.

Kissing Day: காதலர் வாரத்தில் இன்று(பிப்.13) முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. அன்பை, காதலை, பரிவை, காமத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் முத்தம். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் நடு ரோட்டில் யாரென்றே தெரியாத ஒருவருக்கு முத்தம் கொடுப்பதுகூட சகஜமான ஒன்று. ஒருவரை வரவேற்கும்விதமாக, நட்பை வெளிப்படுத்துவதற்காக, மரியாதை கொடுப்பதற்காக இப்படிச் செய்வார்கள். சில நாடுகளில் ஒரு முறை, சில நாடுகளில் இரு முறை, ஃபிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மூன்று முறை முத்தம் கொடுப்பதெல்லாம் வழக்கம். முத்தத்தை எதற்காக இப்படி எல்லோருக்கும் மரியாதை நிமித்தமாகவும், அன்பின் பரிமாற்றமாகவும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது தரும் மருத்துவப் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு முத்தம்… என்னவெல்லாம் செய்யும்?

ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஒரு சிறிய முத்தத்தில் உதடுகளுக்கு அருகேயிருக்கும் இரண்டு தசைகள் உள்பட, முகத்திலிருக்கும் 12 தசைகளுக்கு வேலை கொடுக்கிறோம். ஆழமான முத்தத்தில் 34 முகத்தசைகள் தூண்டப்படுகின்றன. முத்தம் முகத்திலிருக்கும் 34 தசைகளை இயங்கவைத்து, அவற்றை ஆரோக்கியமாக்கி, முகப்பொலிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளர்ச்சி கிடைக்கும்; ரத்தநாளங்கள் விரிந்து கொடுக்கும்; இதயத் துடிப்பு 58% அதிகரிக்கும்.

முத்தம் கொடுக்கும்போது பரிமாறப்படும் உமிழ்நீரில் புரதம் : 0.7 மி.கிராம் இருக்கிறது, கொழுப்பு 0.71 மி.கிராம் இருக்கிறது, உப்பு : 0.45 மி.கிராம் இருக்கிறது, நீர் : 60. மி.கி இருக்கிறது. 10 விநாடி கொடுக்கப்படும் முத்தத்தின் மூலமாக 9 மி.லி உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகிறது. உணர்ச்சிகளுக்குக் காரணமாகும் அட்ரினலின் ஹார்மோன்(Adrenaline Hormone) சுரப்பது அதிகமாகும். மகிழ்ச்சிக்குக் காரணமான செரோட்டோனின் ( Serotonin) சுரப்பு அதிகரிக்கும். மன அமைதிக்கு உதவும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் ( Oxytocin Hormone) சுரப்பு அதிகமாகும்.

கோபம், உடல் பருமன், கொழுப்பு ஆகியவற்றுக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் (Cortisol Hormone) சுரப்பு குறையும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்குச் சமமாக, முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும். மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டுக் கொள்பவர்களின் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்குச் செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறதாம். முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும். அதேநேரம் ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்கும் அப்படினு சொல்லப்படுகிறது. உடல் பருமனாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம். அதற்கு காரணம், நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

பாசம் மற்றும் நெருக்கம் அதிகம் உள்ள மனிதர்கள் தங்களின் அன்பை முத்தமாக வெளிப்படுத்தும் போது அதனை கன்னத்தில் ஒரு முத்தமாக கொடுப்பார்களாம். நெற்றியில் கொடுக்கப்படும் முத்தம் என்பது ஒரு நபர் பாதுகாப்பாக இருப்பதைக் கூறுவதற்கான ஒரு அமைதியான வழியாம். கைகளில் முத்தம் ஒரு உறவைத் தொடங்குவதற்கான ஆர்வத்தின் அடையாளமாம். இது பல்வேறு கலாச்சாரங்களில் மரியாதை மற்றும் போற்றுதலின் அடையாளமாக செய்யப்படுகிறது. உதட்டு முத்தம் தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க முத்தத்தின் ஒரு வடிவமாகும், இது பொதுவாக ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

காது மடல் முத்தம் இது தனது அன்பிற்குரியவரின் காமத்தினை தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் முத்தத்தின் ஒரு வடிவமாம். இது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாக கொடுக்கப்படுகிறதாம். கழுத்து முத்தம் இந்த வகையான முத்தம் பொதுவாக பாலியல் நோக்கங்களுக்காக கொடுக்கப்படுகிறதாம். மேலும் ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த ஆர்வமாக இருக்கும் போது இவ்வகையான முத்தம் பகிர்ந்து கொள்ளப்படுகிறதாம். மூக்கு முத்தம் முத்தங்களின் அழகான வடிவங்களில் ஒன்று மூக்கில் தரப்படும் முத்தம் தானாம். இது காதலில் உள்ளவர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

Readmore: பிரதமர் மோடியின் 36 மணிநேர அமெரிக்க பயணம்!. அதிபர் டிரம்புடனான சந்திப்பு! 6 முக்கிய திட்டங்கள் இதோ!

English Summary

“Can I give you a kiss?”. Today is Kissing Day!. Lovers, know this too!.

Kokila

Next Post

’வேண்டாம்னு சொன்னா விடமாட்டீங்களா’..? தவெக நிர்வாகியின் காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..!!

Thu Feb 13 , 2025
The incident of an 8th grade student committing suicide due to a love affair with a Thaweka administrator has caused shock.

You May Like