கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை அடுத்த கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபாலகண்ணன் (50) – விஜயா (48) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தைகள் இல்லை. கோபாலகிருஷ்ணன் கோவை கல்லூரி ஒன்றில் தங்கி, சமையல் வேலை பார்த்து வருகிறார். இதனால், கல்லூரி விடுமுறை நாட்களுக்கு மட்டுமே சொந்த ஊருக்கு வந்து செல்வார். இந்நிலையில் தான், வீட்டில் தனியாக இருந்த வந்த விஜயாவுக்கும், எதிர்வீட்டில் வசித்து வந்த தேவநாதன் (57) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தேவநாதனுக்கு திருமணமாகி 3 பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கோபாலகண்ணனின் தந்தை ராதாகிருஷ்ணனுக்கு தெரிந்துள்ளது. இந்த விஷயத்தை மகனிடம் சொல்ல, அவர் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். மறுபடியும் வெளியூர் வேலைக்கு கோவை செல்லவே யோசித்தார். இதனால், கடந்த சில மாதங்களாக வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதற்கிடையே, நேற்று முன்தினம் தம்பதிக்கு தகராறு ஏற்பட்டது.
மேலும், நேற்று காலை வாயில் நுரை தள்ளிய நிலையில், கோபாலகண்ணன் வீட்டில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள், அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மனைவி விஜயாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போதுதான், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் விஜயா, தேவநாதன் ஆகிய இருவருமே சேர்ந்து கோபாலகண்ணனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று முன்தினம், விஜயா மீன் குழம்பு வைத்து, அதில் பூச்சி மருந்தை கலந்து கணவர் கோபாலகண்ணனுக்கு பரிமாறியுள்ளார். இதை சாப்பிட்ட அவர், வாயில் நுரை தள்ளி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தெரியாமல் அந்த சாப்பாட்டை அவர் சாப்பிட்டு இறந்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, விஜயா மற்றும் தேவநாதனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.