fbpx

வரும் 19ஆம் தேதி கலந்தாய்வு..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! எந்த பணிகளுக்கு தெரியுமா..?

சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு பணிகளில் அடங்கிய பல்வேறு கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் பதவிகளின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தரவரிசைப் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்காத பட்சத்தில், அவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படாது. மேலும், கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து தேர்வர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது” என தெரிவித்துள்ளார்.

Read More : தொட்டுத் தொட்டு பேசும் லேப் டெக்னீசியன்..!! சக மாணவிகளின் ஃபோன் நம்பரை கேட்டு டார்ச்சர்..!! உடனடி ஆக்‌ஷன் எடுத்த சேலம் அரசு மருத்துவக் கல்லூரி..!!

English Summary

It has been announced that the counselling will be held on February 19th at the TNPSC office in Broadway, Chennai.

Chella

Next Post

இந்திய ரயில்வேக்கு ரூ.62.88 கோடி இழப்பை ஏற்படுத்திய ரயில் இதுதான்.. வந்தே பாரத், ராஜ்தானி இல்ல..

Fri Feb 14 , 2025
Do you know which train caused losses to Indian Railways?

You May Like