fbpx

கோரத்தாண்டவம் ஆடும் பனிப்புயல்!. ஒரே வாரத்தில் 12 பேர் பலி!. ஜப்பான் உள்துறை அமைச்சகம் தகவல்!

Snowstorm: ஜப்பானில் வீசிவரும் கடும் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியது. கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள சாலைகள், ரெயில் தண்டவாளங்கள் ஆகியவை போர்வை போர்த்தியபோது போல பனி மூடியது. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பஸ்கள், புல்லட் ரெயில் முதலிய பொது போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Readmore: சோகம்.. மகா கும்பமேளாவிற்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பக்தர்கள் உயிரிழப்பு..!!

English Summary

A terrible snowstorm! 12 people died in a single week! The Ministry of Internal Affairs in Japan reported!

Kokila

Next Post

இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்.. உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் சீக்கிரமே கரையும்..!!

Sat Feb 15 , 2025
Health tips: Just eat these... the fat accumulated in the body will melt like ice cream!

You May Like