fbpx

உங்கள் பைக், காரை விற்க போறீங்களா..? முறைப்படி கட்டணம் செலுத்தி இதை பண்ணுங்க..!! இல்லையென்றால் சிக்கல் உங்களுக்குத்தான்..!!

நீங்கள் இத்தனை ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வாகனத்தை விற்க முடிவு செய்திருக்கிறீர்களா..? அப்படியென்றால் இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள்.

மாநில போக்குவரத்து ஆணையர், அனைத்து பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (RTO) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களைக் கையாளும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி அங்கீகாரச் சான்றிதழைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பதிவு செய்துவிட்டால், தனி நபர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும் டீலர்கள் தான், புதிய உரிமையாளர்களின் பெயருக்கு மாற்றப்படும் வரை எந்தவொரு சம்பவத்திற்கும் பொறுப்பாவார்கள். அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் பரிமாற்ற உத்தரவை உருவாக்க பயனரின் பெயர் மற்றும் ஓடிபி-ஐ பெறுவார்கள். இது முந்தைய உரிமையாளரையும், வாங்குபவரையும் ஆவணப்படுத்தும்.

தமிழ்நாட்டில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட வாகன டீலர்கள் உள்ளனர். ஆனால், இதுவரை 15 பேர் மட்டுமே தேவையான சான்றிதழைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், தற்போது அதிக டீலர்களைச் சேர்க்க போக்குவரத்துத் துறை முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் டீலர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள கெடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காரணம், ரூ.25,000 என்ற கட்டணத்தை தாமக செலுத்த யார் தான் முன்வருவார்கள் எனவும் வினவுகின்றனர். தனிநபர்களும் தங்களது வாகனத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ய, முறைப்படி கட்டணம் செலுத்தி ஆவணங்களில் பெயரை மாற்ற வேண்டும். தவறினால் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

தனிநபர்களுக்கான ரீசேல் கட்டணம் :

* இருசக்கர வாகன ரீசேல் – ரூ.150

* பேருந்து / ட்ரக் ரீசேல் – ரூ.750

* ஆட்டோ – ரூ.300

* கார் – ரூ.500

* இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் – ரூ.1,500 – ரூ.2,500

தேவையான ஆவணங்கள் :

* படிவம் 29 – உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்

* படிவம் 38 – உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம் (வாடகை-கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் இருந்தால்)

* பதிவுச் சான்றிதழ்

* பான் கார்டு

* ஆதார் அட்டை, ரேஷன் கார்டு

* தடையில்லாச் சான்றிதழ் (NOC)

Read More : விஜய்யை விடுங்க..!! தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் X, Y, Y+, Z, Z+ பாதுகாப்பு இருக்கு தெரியுமா..?

English Summary

Have you decided to sell the vehicle you’ve been using for so many years? If so, read this post in its entirety.

Chella

Next Post

இது என்னடா காமெடி லெஜண்ட்டுக்கு வந்த சோதனை..? இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்..!! ’ஒத்த ஓட்டு முத்தையா’ திரை விமர்சனம்..!!

Sat Feb 15 , 2025
The story of the film is about what Muthaiah, a big politician due to the same vote, did to win the upcoming elections.

You May Like