fbpx

பிப்.28ஆம் தேதி தஞ்சை, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வெளுக்க வாங்கப் போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பிப்.26ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் பிப்.27ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 28ஆம் தேதி தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1ஆம் தேதியும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மார்ச் 2ஆம் தேதி தமிநாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’அவன் தாண்டா பெரிய வேலைய பார்த்துவுட்டு போயிட்டான்’..!! வெள்ளியங்கிரி மலையில் பறந்த தவெக கொடி..!! அத்துமீறியதால் அதிரடி ஆக்‌ஷன்..!!

English Summary

The Chennai Meteorological Department has issued a warning of heavy rains in 9 districts including Thanjavur, Thiruvarur and Nagapattinam.

Chella

Next Post

ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?. ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்!. வாக்கெடுப்பில் இருந்து விலகிய இந்தியா!

Tue Feb 25 , 2025
Will the Russia-Ukraine war end?. Resolution passed at the UN!. India abstained from the vote!

You May Like