Visual Communication முடித்து, Air Hosstess படிப்பு படித்து விஜய் டிவியில் தொகுப்பாளினியாக களமிறங்கியவர் தான் ஜாக்லின். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் இணைந்து இவர் தொகுத்து வழங்கியதன் மூலம், இவர் பிரபலமடைந்தார். இடையில், இவர் தொகுப்பாளினி என்பதில் இருந்து சீரியல் நடிகையாக மாறினார்.
தேன்மொழி என்ற தொடரில் இவர் நடித்து வந்த நிலையில், அந்த சீரியல் பாதியிலேயே முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் முடிந்தது. அடிக்கடி போட்டோ மற்றும் வீடியோ பதிவிட்டு இவர் சமூகவளைதலத்தில் ஆக்டிவாக இருந்து வருவது உண்டு. அதே சமயம் அவரது பதிவுகளுக்கு எல்லாம் புதர்கமான கமெண்ட் செய்து அவரது ரசிகர்களும் ஆக்டிவாக இருப்பது உண்டு.
அந்த வகையில், சமீபத்தில் தொகுப்பாளினி ஜாக்லின் தனது தோழியும் புகைப்பட கலைஞருமான சாரதா என்பவருடன் நெருக்கமாக இருக்கும் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரிடம் வழக்கம் போல் புதர்கமான கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில், சமீபத்தில் ஜாக்லின் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அந்த பேட்டியின் போது, “நீங்கள் உங்களுடைய தோழியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து, நீங்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன…?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜாக்லின், “இதோ பாருங்கள், இப்படியான கமெண்ட்கள் எல்லாம் நான் பார்க்கும் போது இவ்வளவுதானா நீங்கள்..? அது ஏன் இவ்வளவு மோசமாக உங்களுடைய பார்வை இருக்கிறது என்று தான் எனக்கு தோன்றும்.
ஒருவேளை, மூன்று தோழிகள் ஒன்றாக புகைப்படம் எடுத்து வெளியிட்டால், மூன்று பேரும் ஓரினச்செர்கையாளரா..? என்று கேட்பார்கள். இவ்வளவு ஏன், பேட்டி எடுத்துக்கொண்டிருக்கும் நீங்களும், நானும் சேர்ந்து புகைப்படம் வெளியிட்ட போதும் இதே போல தான் அடிச்சிருக்காங்க. நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, என்று நமக்கே தெரியவில்லை..
அதை நாம் சொல்வதற்கு முன்பே நாம் இப்படித்தான் என்று நமக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் நம்மை பற்றி கூறுவது எப்படி..? நான் யாருடன் சேர்ந்து போட்டோ போட்டால் உங்களுக்கு என்ன..? உங்களுக்கு ஏன் உறுத்துது..? என்று தான் எனக்கு கேட்க தோன்றும்.. என்று பேசியுள்ளார்.
Read more: “அம்மா, அந்த தாத்தா என்னோட டிரெஸ்ஸை கழட்டி……” 7 வயது சிறுமிக்கு, பூசாரி செய்த காரியம்..