மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB), புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் காலியாகவுள்ள Pharmacist பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியிடங்கள் : 425
கல்வி தகுதி :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Pharmacy / Bachelor of Pharmacy / Pharm. D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் Language Eligibility Test / Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.03.2025