fbpx

150 நாடுகளில் தடை.. மிகவும் சர்ச்சைக்குரிய படம்.. வெளியான சில நாட்களில் இயக்குனர் கொல்லப்பட்டார்…

திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துகள், அல்லது காட்சிகளுக்காக அவ்வப்போது பல படங்கள் சர்ச்சைகளை சந்தித்துள்ளன. சில சமயங்களில் இதுபோன்ற படங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது.

அந்த வகையில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பல படங்கள் உள்ளன. ஆனால் ஒன்று அல்லது இரண்டு நாடுகள் அல்ல, 150 நாடுகளால் தடை செய்யப்பட்ட ஒரு படம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

அந்த படத்தின் கதை, படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் என பல சர்ச்சைகளே அதற்கு காரணம்.. 1975-ம் ஆண்டு வெளியான இந்த இத்தாலிய திரைப்படம் மிகவும் சர்ச்சைக்குரிய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த படத்தின் பெயர் ‘‘Salò or the 120 Days of Sodom‘. இது பியர் பாலோ பசோலினி இயக்கிய ஒரு அரசியல் கலை திகில் படம். இந்த படம் 1785 ஆம் ஆண்டு மார்க்விஸ் டி சேட் எழுதிய ‘தி 120 நாட்கள் சோடோம்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது, ஆனால் இதன் கதை இரண்டாம் உலகப் போரின் போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்தன.

இந்த படத்தில், சில குழந்தைகள் கடத்தப்பட்டு நாஜிக்களின் கைப்பாவைகளாக மாற்றப்படுவது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.. இந்தப் படம் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளின் பல கொடூரமான சித்திரவதைகளைக் காட்டுகிறது. இந்தப் படம் 1993 வரை ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்டது, பின்னர் 1998 இல் மீண்டும் தடைசெய்யப்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் பியர் பாவ்லோ பசோலினி, வெளியான உடனேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய பொருள் மற்றும் துணிச்சலான துஷ்பிரயோகக் காட்சிகள் காரணமாக இந்தப் படம் உலகளவில் சர்ச்சைக்குரிய படமாக மாறியது. 18 இளைஞர்களைக் கடத்தி 4 மாதங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சித்திரவதை செய்யும் 4 பணக்காரர் மற்றும் ஊழல்வாதிகளை பற்றி இந்த படம் பேசுகிறது.

பாவ்லோ போனசெல்லி, ஜியோர்ஜியோ கேடால்டி, உபெர்டோ பாவ்லோ குயின்டவல்லே மற்றும் ஆல்டோ வாலெட்டி போன்ற நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.. இது தவிர, கேட்டரினா போரட்டோ, எல்சா டி ஜியோர்ஜி, ஹெலன் செர்கர் மற்றும் சோனியா சவியாங் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

Read More : “ என் அப்பா வயதில் இருந்த இயக்குனர் தப்பா நடந்துகிட்டாரு..” கிழக்கு சீமையிலே நடிகை ஓபன் டாக்..

English Summary

Do you know of a film that was banned by 150 countries?

Rupa

Next Post

"யாராவது காப்பாத்துங்க" கதறிய இளம்பெண்; பேருந்தில் நடந்த கொடூர சம்பவம்.

Thu Feb 27 , 2025
young woman was sexually abused in bus

You May Like