வயதானவர்கள் மட்டும் இல்லாமல், இளம்வயதினருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று மூட்டுவலி தான். ஆம், நமது முன்னோர்களுக்கு 80 வயது ஆனாலும் கூட மூட்டு வலி வரவில்லை. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் 30 வயதை தாண்டுவதற்கு முன்பே மூட்டு வலி வந்துவிடுகிறது. மக்களின் இந்த பிரச்சனையை புரிந்துக் கொண்ட கார்பரேட், பல விதமான கலர்களில் புது புது வலி மருந்துகளை கொண்டு வந்தது.
நம் மக்களும் கண்ணால் காண்பது தான் உண்மை என்று நம்பி கண்ட கிரீம் மட்டும் ஸ்ப்ரே வாங்கி பயன்படுத்துகின்றனர். உண்மை என்னவென்றால், நமது உடலுக்குள் ஏற்படும் பிரச்சனையால் உண்டாகும் மூட்டு வலிக்கு உடலுக்குள் தான் மருந்தை அனுப்பி சரி செய்ய முடியும். அது தான் நிரந்தர தீர்வை கொடுக்கும். வெளியே பூசும் தைலங்கள் அனைத்தும் தற்காலிக நிவாரணத்தை தான் கொடுக்கும்.
அதற்காக நாம் மருந்தை உணவாக சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உணவை நாம் மருந்தாக சாபிடாலே போதும். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். அந்த வகையில், மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் குணம் பிரண்டையில் உள்ளது. ஆம், இந்த பிரண்டையில் துவையல் வைத்து சாப்பிடும் போது மூட்டுவலி குணமாகும். இதனால் அடிக்கடி இந்த பிரண்டையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
கொல்லைமேடுகளில், கழனிகாடுகளில் மிக எளிதாகக் கிடைக்கும் பிரண்டை தற்போது பல கடைகளிலும் விற்கப்படுகிறது. வாரத்துக்கு ஒருமுறை இந்த பிரண்டையை சாப்பிட்டு வந்தால், 80 வயது வரை ஆர்த்தரிட்டிஸ் எனப்படும் முட்டி வலி வராது. மேலும், இந்த பிரண்டை துவையலை சட்னி போல் செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது சாப்பிடலாம்.
பிரண்டை துவையல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.. இதற்கு முதலில், பிரண்டையை நார் உரித்து சுத்தம் செய்து நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாய் வைத்து, அதில் லேசாக எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெய் சூடான பிறகு, ஒரு கைப்பிடி அளவு உளுத்தம்பருப்பு, ஒரு கைப்பிடி துவரம்பருப்பு, சிறிது கடலைப் பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயில், சிறிது எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம் 150 கிராம், 1 தக்காளி நறுக்கியது, காய்ந்த மிளகாய் 4, தேவையான அளவு உப்பு போட்டு வதக்கி விடுங்கள். நன்கு வதக்கியதும் அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயில் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து, அதனுடன் தேங்காய் துருவல் 1 கப் சேர்த்து நன்கு வதக்குங்கள். இப்போது வதக்கிய அனைத்தையும் அரைத்து எடுத்தால், சுவையான பிரண்டை துவையல் ரெடி.
Read more: 5 இளைஞர்களில் ஒருவர் இந்த ஆபத்தான நோய் இருப்பது தெரியாமலே வாழ்கின்றனர்.. அதன் அறிகுறிகள் என்ன