fbpx

ஹிந்தியை திணிக்கவில்லை; அனைத்து மொழிகளும் சமம்தான்!. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

Dharmendra Pradhan: ”தேசிய கல்வி கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,” என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி கொள்கை வாயிலாக தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக, ஆளும் தி.மு.க., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது: தேசிய கல்வி கொள்கையில் எந்த இடத்திலும், ஹிந்தியை மட்டும் படிக்க வேண்டும் என்று கூறவில்லை. தாய்மொழியில் கல்வி கற்பதையே தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தமிழில் பாடம் நடத்தப்பட வேண்டும்; அதனுடன் வேறு ஒரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹிந்தி, தமிழ், ஒடியா, பஞ்சாபி என, அனைத்து மொழிகளின் வளர்ச்சியை கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது. அதன்படி, அனைத்து மொழிகளும் சமமாக பார்க்கப்படுகின்றன. ஹிந்தியை திணிக்கவில்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக மட்டுமே தமிழகத்தில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

Readmore: 97வது ஆஸ்கர் விருது!. சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார் கீரன் கல்கின்!. ரெட் கார்பெட் அணிவகுப்பில் ஜொலிக்கும் பிரபலங்கள்!

English Summary

Hindi is not being imposed; all languages ​​are equal! Union Minister Dharmendra Pradhan!

Kokila

Next Post

ரூ.122 கோடி செலவில் 5 மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு...! தமிழக அரசு அரசாணை வெளியீடு...!

Mon Mar 3 , 2025
Intensive care units in 5 hospitals and integrated public health laboratories in 3 hospitals

You May Like