சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் முக.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தங்க மோதிரங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. ஒரு இடம் கூட குறையக் கூடாது. இதுதொடர்பாக கருத்துக் கேட்க தான், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.
அதே சமயம், வட மாநிலங்களிலும் ஒரு இடம் கூட அதிகரிக்கக் கூடாது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். தென்னிந்திய நலனுக்காக நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றால் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “சீமான் விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தான் இந்த வழக்குகள் நடந்து வருகிறது” என்றார். சீமான் மீது அந்த பெண் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி. அவர் ஒரு பிரச்சனையே கிடையாது.
நாங்கள் எதற்கு இந்த விவகாரத்தில் தலையிட போகிறோம். அப்படி தலையிட்டிருந்தால், இந்த வழக்கை எப்படியெல்லாம் திசை திருப்பி இருக்கலாம் தெரியுமா..? சீமான் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நிச்சயமாக அது நடக்கும்” என்று தெரிவித்தார்.
Read More : நடிகை பலாத்காரம்..!! சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு..!! இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!