ஒரு வீட்டைக் கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மேலும், அதிகரித்து வரும் நிலத்தின் விலைகள், பொருள் விலைகள் மற்றும் தொழிலாளர் கட்டணங்களுடன், வீடு கட்டும் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் சவாலான அம்சங்களில் ஒன்றாகும். ஆனால், விடாமுயற்சி மற்றும் திட்டமிடல் மூலம் தனிப்பட்ட வீடு கட்டுபவர்கள் (IHBs) ஒட்டுமொத்த கட்டுமானச் செலவுகளில் குறிப்பிடத்தக்க சேமிப்பைச் செய்ய முடியும்.
இந்நிலையில் தான், கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜல்லி, எம் சாண்ட் ஆகியவற்றின் கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், வீடு கட்டுபவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜல்லி வகைகளின் விலை ரூ.4,000இல் இருந்து ரூ.3,400ஆக குறைந்துள்ளது. எம் சாண்ட், ஜிஎப்சி ஆகியவற்றின் விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், புதிதாக வீடு கட்டுவோர் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். ஆனால், தற்போது இந்த விலை குறைப்பால், சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.