சென்னையில் டாக்ஸி, ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் QR குறியீடு ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஐடி உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்வோர் கார் டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை புக் செய்து பயணிக்கின்றனர். இந்நிலையில், இதுபோன்ற வாகனங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னையில் தற்போது கியூஆர் கோடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடினை ஸ்கேன் செய்தால் போதும்.
உடனடியாக அந்த வாகனம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து உங்களுக்கு உதவி செய்வார்கள். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர காவல் ஆணையர் அருண் கூறுகையில், ”சென்னையில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
அதன்படி, வாடகை வாகனங்களில் பயணிக்கும் போது ஏதாவது அச்சம் ஏற்பட்டால், உடனே அங்கு ஒட்டப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது காவல்துறையின் எஸ்.ஓ.எஸ் செயலியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது, அந்த வாகனம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் கண்காணிப்போம். பின்னர், நீங்கள் செல்லும் வாகனத்தின் அருகே உள்ள ரோந்து வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதையடுத்து, உடனே அவர்கள் உங்கள் இடத்திற்கு வருவார்கள்.
க்யூஆர் குறியீட்டில் அந்த வாகனம் பற்றிய அனைத்து விவரங்களும் காவல்துறைக்கு வந்துவிடும். அதை வைத்து அந்த வாகனம் சென்று கொண்டிருக்கும் இடம், ஓட்டுநரின் பெயர், முகவரியை எளிதாக கண்டறிய முடியும். தற்போது, சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த க்யூஆர் குறியீட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த க்யூஆர் குறியீட்டை ஒட்டியப் பிறகு நீக்கினால், வாகன ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
Read More : சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மசாலா பொருட்கள்..!! இனி இப்படி குடிச்சி பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!