fbpx

ஆஹா!. “ஜிஎஸ்டி வரி மேலும் குறைக்கப்படும்”!. நிர்மலா சீதாராமன் சொன்ன குட்நியூஸ்!.

GST tax: ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும் என்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடந்த 2017 ஜூலை 1ம் தேதிமுதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமுல்படுத்தப்பட்டது. தற்போது 5,12,18,28 சதவீத அடிப்படையில் வரி விகிதங்கள் உள்ளன. இந்த வரிவிகிதம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ஆலோசனை செய்ய ஜிஎஸ்டி வரி தொடர்பான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆலோசனை செய்து வரிவிகிதங்களை குறைக்கவும், வரியை மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளனர். இந்தநிலையில், இதுபற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும். வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளை பகுத்தாய்வு செய்யும் பணி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் வருவாய் நடுநிலை விகிதம் (ஆர்என்ஆர்) 15.8 சதவீதத்திலிருந்தது. அது 2023ல் 11.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது இன்னும் குறையும். எனவே வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. அந்த வேலை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Readmore: தமிழகத்தில் 11-ம் தேதி 12 மாவட்டத்தில் கனமழை..! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

English Summary

Wow!. “GST tax will be reduced further”!. Good news from Nirmala Sitharaman!.

Kokila

Next Post

தொழில் நிறுவனங்களுக்கான புதிய கடன் மதிப்பீட்டு மாதிரி அறிமுகம்...! மத்திய அமைச்சர் தகவல்

Sun Mar 9 , 2025
Introduction of a new credit rating model for industrial companies.

You May Like