வெயில் காலம் தொடங்கி விட்ட நிலையில், பலர் ஏசி, ஏர் கூலர்கள் வாங்க தொடங்கிவிட்டனர். வெளியில் போனால்தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டிற்குள் இருந்தால் கூட வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் ஏசி, ஏர் கூலர்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.
இப்படி மனிதர்களை வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி, ஏர் கூலர்கள் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏசி, ஏர் கூலர்கள் இல்லாமலே நம் வீட்டையும் குளுகுளுவென்று மாற்ற முடியும். அந்த வகையில், இயற்கையான முறையில் நமது வீட்டை எப்படி குளிர்ச்சியாக வைத்திருப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
ஏசி, ஏர் கூலர்கள் இல்லாமல், நாம் நமது வவீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க, நம் முதலில் நமது வீட்டை நல்ல காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். எதிரெதிர் திசையில் ஜன்னல்கள் இருந்தால் காற்று எளிதாக வந்து செல்லும். இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து விடும். இதற்கு நாம் நாள் முழுவதும் ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
காலை மற்றும் மாலை வேளைகளில் ஜன்னல்களை திறந்து வைத்தாலே போதும், குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வந்து செல்லும். இதனால் அறையில் உள்ள வெப்பம் குறைவாக இருக்கும். மேலும், நீங்கள் டேபிள் பேனுக்கு முன்பாக ஐஸ்கட்டி அல்லது அதிகமாக குளிர்ந்த நீர் இருக்கும் கிண்ணம் ஒன்றை வைக்க வேண்டும். இப்போது பேனில் இருந்து வரும் காற்று, இந்த நீரில் பட்டு வருவதால் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.
இதனால் அறை முழுவதிலும் ஜில்லென்ன இருக்கும். இதனால் உங்களுக்கு சளி பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தால், ஜன்னல் ஓரங்களில் செடிகளை வைக்கலாம். இதனால், வீடு அழகாக இருப்பது மட்டும் இல்லாமல், குளிர்ச்சியாகவும் இருக்கும். குறிப்பாக கொடி போன்ற வளரும் தாவரங்களை ஜன்னலில் பரவ விடுவதால், வெப்பம் குறைந்து விடும்.
இதற்கு பதில், நீங்கள் மாடிகளில் செடி அல்லது கொடிகளை வளர்க்கலாம். இதனால் வெயிலின் தாக்கம் பெருமளவு குறையும். வெயிலின் நேரடி தாக்கத்தை இந்த செடிகள் குறைத்து விடும். இதனால் வீட்டிற்குள் வெயிலின் தாக்கம் குறைந்து விடும். மூங்கில் பாய்களும் நல்ல குளிர்ச்சியை தரும். ஏனென்றால், இந்த பாய்களில் வெப்பத்தை தடுக்கும் சக்தி உள்ளது.
இதனால் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களில் மூங்கில் பாய்களை தொங்க விட்டால் அறை வெப்பம் உள்ளே நுழையாதபடி அவை தடுத்துவிடும். மூங்கில் பாய் வாங்க அதிக செலவாகும் என்று நீங்கள் நினைத்தால், இதற்கு பதில் நீங்கள் தண்ணியில் நனைத்து பிழிந்த சாக்குகளை பயன்படுத்தலாம். ஓட்டு வீட்டில் வசிப்பவர்கள் கூட, இந்த சாக்கை ஓட்டின் மீது போட்டு விடலாம். இதனால் வீடு முழுவதும் நல்ல குளிர்ச்சி இருக்கும்.
Read more: சரும அழகை மேம்படுத்தும் கழுதை பால்.. ஒரு லிட்டர் இவ்வளவு ரூபாயா..? அப்படி இதில் என்ன ஸ்பெஷல்?