3-வது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 ரொக்கம் அல்லது ஒரு பசுமாடு வழங்கப்படும் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாநிலங்களில் வயதானவர்களின் எண்ணிக்கையும், வட மாநிலங்களில் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் பேசியிருந்தார். மேலும், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.
அதேபோல், குழந்தை பேறு அதிகரிப்பது குறித்து முதல்வர் முக.ஸ்டாலினும் பேசியிருந்தார். இதற்கிடையே, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற விழா ஒன்றில் தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) விஜயநகர எம்.பி. காளிசெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மூன்றாவதாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 ரொக்கம் வழங்கப்படும். மேலும் அந்த பெண், ஆண் குழந்தையை பெற்றெடுத்தால் அவருக்கு ஒரு பசுமாடு வழங்கப்படும். இதற்கான நிதியை தனது ஊதியத்தில் இருந்தே வழங்குவேன்” என தெரிவித்துள்ளார்.
Read More : ’நீங்க என்ன பண்ணாலும் அது மட்டும் நிச்சயம் நடக்காது’..!! திமுக எம்பி கனிமொழி அதிரடி