fbpx

பள்ளி மாணவர்களே..!! கோடை விடுமுறை எப்போது தொடங்குகிறது தெரியுமா..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதலும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதியும், 1 – 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடக்கி 17ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்.9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.15ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையும் நடத்தப்படவுள்ளன.

இது தவிர காலஅட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை பொறுத்தவரை 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதலும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Read More : Solar Scheme | பிரதமரின் சூரிய வீடு திட்டத்திற்கு விண்ணப்பித்து விட்டீர்களா..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

English Summary

Summer vacation for students in grades 1 to 5 will begin on April 22nd, and for students in grades 6 to 9, it will begin on April 25th.

Chella

Next Post

அதிர்ச்சி..!! கார், ஜீப் மீது பயங்கரமாக மோதிய டேங்கர் லாரி..!! 7 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி..!! 3 பேர் படுகாயம்..!!

Thu Mar 13 , 2025
Seven people were tragically killed when a gas tanker truck collided with two four-wheelers in Dhar district of Madhya Pradesh.

You May Like