கேரளாவில் பிறந்து வளர்ந்து தமிழ் ரசிகர்களின் மனதை பிடித்தவர் தான் நடிகை சங்கீதா. 1978 ஆம் ஆண்டு, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், மலையாளம் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். ஒரு நல்லவன் என்ற படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக சங்கீதா அறிமுகமானார்.
இவர் சீதனம், சாமுண்டி, தாலாட்டு, கேப்டன் மகள், மகாநதி, ராவணன், சரிகமபதனி, எல்லாமே என் ராசாதான், அம்மன் கோவில் வாசலிலே, வள்ளல், கங்கா கௌரி, காலம் மாறி போச்சு போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார். ஆனால், அவரை பிரபலமாக்கிய படம் என்றால் அது 1996 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பூவே உனக்காக படம் தான்.
இந்தப் படம் இவரை சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாற்றியது. இந்நிலையில், இவர் சிலம்பாட்டம் படத்தை இயக்கிய இயக்குநர் சரவணனை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். 2002 ஆம் ஆண்டு இவர்களுக்கு சாய் – தேஜஸ்வதி என்ற மகள் பிறந்தனர். இதற்கு பிறகு, 2014-ம் ஆண்டு இவர் மலையாள படமான ‘நகர வருதி நடுவில் நியான்’ என்ற படத்தில் நடித்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான கண் திறந்து பாரம்மா என்ற படத்தில் தான் இவர் கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு, 49 வயதில் அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், பரத் ஹீரோவாக நடிக்கிறார். இவர்களுடன் சங்கீதாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.