fbpx

Tn Budget : கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் தடுப்பூசி.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..

2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்:

திசையன்விளை, காங்கேயம், மணப்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு தொழிற் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும்.

இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் உருவாக்கப்படும்.

கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் தடுப்பூசி வழங்க ரூ.36 கோடி ஒதுக்கீடு.

மருத்துவ துறைக்கு ரூ.21,976 கோடி ஒதுக்கீடு.

வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புக்கள் உருவாக்கப்படும்.

குன்னூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ரூ.300 கோடியில் நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும்.

அரசு பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

அரசு பொறியியல், கலை கல்லூரிகளில் AI உள்ளிட்ட நவீன பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பல உலக சாம்பியன்களை உருவாக்கும் வகையில், பள்ளி பாடத்தில் சதுரங்க விளையாட்டினை சேர்க்கும் விதமாக உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.

Rupa

Next Post

BREAKING | 'தமிழ்நாட்டில் மேலும் ஒரு விமான நிலையம்'..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..? அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

Fri Mar 14 , 2025
New airports will be built in Ramanathapuram and Rameswaram areas.

You May Like