பங்களாதேஷின் மெஹெர்பூரில் உள்ள குரங்கு ஒன்று, தனக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் காயத்தைக் குணப்படுத்துவதற்காக மெடிகல் பார்மெசிக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பங்களாதேஷ் உள்ள மெஹெர்பூரில் குரங்கு ஒன்றிக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தை குணப்படுத்த அங்குள்ள பார்மெசிக்கு சென்றுள்ளது. அங்கு அது தனக்குக் காயமடைந்த இடத்தை காட்டியுள்ளது. மேலும் ஒரு நபர் அந்த குரங்கின் அடிபட்ட பகுதிக்கு மருந்தை இடுகிறார். உடனே அந்த குரங்கு வலி அதிகமானதை போல வேகமாக எழுந்து அந்த காயத்தைப் பார்க்கிறது. பின் அமைதியாக சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காயத்திர்கு சிகிச்சை பெற மெடிக்கலுக்கு சென்ற குரங்கின் புத்திசாலித்தனத்தை நெட்டிசங்கள் பாராட்டுகின்றனர். மறுபுறம் குரங்கை அன்பாக நடத்திய மருத்துவ ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நெட்டிசன்கள் பாராட்டினர்.
கேள் என்ற பயனர் ஒருவர் ”மனிதர்களை ஒப்பிடும் போது இந்த குரங்கு மிகவும் அன்பானது, நாம் அவரிடம் சாதாரணமாக நடந்தால் அதுவும் நம்மிடம் அப்படியே நடக்கும்” என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் ஒருவர் “இந்த குரங்கு மிகவும் புத்திசாலிதான், இல்லையெனில் இந்த மாதிரியான செயலை செய்வது ஆச்சரியம்தான்” என்றும் கூறியுள்ளார்.மேலும் இந்த வீடியோ சமூக ஊடக பயனர்களால் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.