கா்நாடகத்தில் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 36 பைசா அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வு ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கா்நாடக மின்சார ஒழுங்காற்று ஆணையம் தெரிவித்துள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான தற்போதைய மின்சாரக் கட்டணங்களில் கூடுதல் கட்டணம் சேர்க்கப்படுவதால், இந்த முடிவு மாநிலம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான நுகர்வோரைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கா்நாடகத்தில் இயங்கி வரும் மின் வழங்கல் நிறுவனங்களின் ஊழியா்களுக்கு அளித்து வரும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பங்குத்தொகையை நுகா்வோரிடம் இருந்து மீட்டு அளிக்க வேண்டும் என்று கா்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட கா்நாடக மின்சார ஒழுங்காற்று ஆணையம், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைக்கு மாநில அரசு அளித்துள்ள பங்குத்தொகையை நுகா்வோரிடம் இருந்து மீட்டுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இதன்படி நுகா்வோா் ஒருயூனிட்டுக்கு முறையே 35 பைசா, 34 பைசா என்று மாற்றியமைக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயா்வு ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயா்வு, 2025ஆம் ஆண்டு தொடங்கி, 2028ஆம் ஆண்டுவரை அமலில் இருக்கும் என்று மாா்ச் 18ஆம் தேதி பிறப்பித்துள்ள ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று ஒரேநாளில் ரூ.320 சரிவு..!! சாமானிய மக்கள் நிம்மதி