தற்போதைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் போன்றவை முக்கியமாக ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் தமபதிகளின் போட்டோ எல்லை மீறுவதையும், சில சமையம் அது ஆபத்தில் முடிவதியும் நாம் செய்திகள் மூலம் பார்க்கின்றோம். அதே போல் தற்போது போட்டோஷூட் எடுக்கும்போது அழகுக்காக வெடிக்கப்படும் கலர் பாம்ப் தவறாக வெடித்து மணமகள் காயம் அடைந்துள்ளார்.
கனடாவில் வாழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகளான விக்கி மற்றும் பியா ஜோடி திருமண கொண்டாட்டத்துக்காக பெங்களூருக்கு வந்து, அங்கு போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அப்போது வண்ணக் கலர் பறக்கும்படியான போட்டோஷூட் எடுக்க திட்டமிடப்பட்டதால், மணமகன் மணமகளை தூக்கியுள்ளார். அப்போது வண்ணக்கலருக்காக வெடிப்பட்ட பாம்ப் தவறாக வெடித்து மணமகளின் மீது தீக்காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து விடியோவை வெளியிட்ட தம்பதியினர், “உங்கள் நிகழ்வுகளில் வண்ண வெடிகுண்டு பட்டாசுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கவே இந்தப் பதிவு. நாங்கள் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றினோம், ஆனாலும் ஏதோ ஒன்று செயலிழந்து எங்களுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் காயமடைந்தோம். நாங்கள் தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றோம், இருப்பினும் எங்கள் வரவேற்பறைக்குச் சென்று இரவின் மீதியை அனுபவித்தோம்” என்று தம்பதியினர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர்.
Read More: நாளை தொடங்கும் ஐபிஎல் போட்டிகள்!. கொல்கத்தா மெட்ரோ சிறப்பு சேவைகள் அறிவிப்பு!.