தமிழ்நாட்டு அடுத்தாண்டு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களுடன் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழுவில் பேசிய விஜய், “அரசியல் சூறாவளி, தேர்தல் சுனாமியை யாராலும் தடுக்க முடியாது. அடிப்படை கொள்கையில் தவெக உறுதியாக இருக்கும். எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடி எங்கள் கட்சிக்கு மட்டும் கொடுக்கிறார்கள். இப்போது வரை இடையூறு வந்து கொண்டுதான் இருக்கிறது. காற்று, மழை இயற்கையை யாராலும் தடுக்க முடியாதோ, அதேபோல் தவெகவை யாராலும் தடுக்க முடியாது.
மக்களின் அனைத்து போராட்டங்களுக்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதுணையாக இருக்கும். அரசுக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் தவெக நிற்கும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே சரியில்லை. இதற்கு காரணம் இந்த கரெக்ஷன் கபடதாரிகள் தான். கேள்வி கேட்டால், விமர்சித்தால் மன்னராட்சி முதல்வருக்கு ஏன் கோபம் வருகிறது..? தமிழ்நாட்டு அடுத்தாண்டு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டும் தான் போட்டி இருக்கும். அது தவெக – திமுக” என்று பேசினார்.
Read More : மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களே..!! உங்க பெயரை சொல்ல எனக்கு என்ன பயம்..? தவெக தலைவர் விஜய் தடாலடி பேச்சு..!!