fbpx

மாணவர்களே ரெடியா..? முன்கூட்டியே 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு தேர்வு..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!!

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்படுமா? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம், “இப்போது வெயில் அதிகரித்துள்ளது. பிளஸ் 2, பிளஸ் 1, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுகிறோம். 1 முதல் 5ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு அடுத்த மாதம் தான் தேர்வு நடத்தவுள்ளோம். தேர்வை முன்கூட்டியே நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “”பொதுவாக இந்த கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் தேவையான பாடத்தை முடித்து, அடுத்த கல்வியாண்டு தொடங்க சவால் என்பது நம்மிடம் நிறைந்து தான் உள்ளது. எனவே, சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் (சிஇஓ) கலந்து பேசி இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும்” என்றார்.

Read More : மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களே..!! உங்க பெயரை சொல்ல எனக்கு என்ன பயம்..? தவெக தலைவர் விஜய் தடாலடி பேச்சு..!!

English Summary

With the scorching heat of summer in Tamil Nadu even before the start of the season, Minister Anbil Mahesh has clarified whether full-year exams will be conducted in advance for students from classes 1 to 5.

Chella

Next Post

மியான்மர் தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்…! இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடி உறுதி…!

Fri Mar 28 , 2025
Earthquake shakes Myanmar, Thailand...! India ready to provide all assistance - PM Modi assures...!

You May Like