fbpx

’திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறு’..!! ’இளைஞர்களின் காவல்துறை கனவே பறிபோச்சு’..!! கொந்தளித்த அண்ணாமலை..!!

திமுக அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தாலுகா மற்றும் ஆயுதப்படையில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கடந்த 2024ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், 2ஆம் நிலைக் காவலர் தேர்வுகளை நடத்தாமல், இளைஞர்களின் ஓராண்டை வீணடித்த திமுக அரசைக் கண்டித்தும், 2025-க்கான சார்பு ஆய்வாளர், 2ஆம் நிலைக் காவலர் தேர்வில், 2024ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால், இன்று வெளியிடப்பட்டு இருக்கும் காவலர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், வயது வரம்பு 01-07-2025 தேதி அன்று 30 வயது நிரம்பியிருக்கக் கூடாது என்று தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்தாண்டு தேர்வுகள் நடத்தாமல் பல இளைஞர்களின் வயது வரம்பு ஓராண்டு தள்ளிப் போயிருக்கிறது. திமுக அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது. எனவே, காவலர் தேர்வுகளுக்கு 2024ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Read More : ‛இளமை எனும் பூங்காற்று’..!! பழம்பெரும் நடிகர் ரவிக்குமார் காலமானார்..!! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!!

English Summary

Annamalai has said that the DMK government’s mistake cannot allow the youth’s dream of becoming a police officer to be dashed.

Chella

Next Post

பேரவையில் வெடித்த ’எம்புரான்’ சர்ச்சை..!! பற்ற வைத்த வேல்முருகன்..!! கொந்தளித்த துரைமுருகன்..!! முற்றுப்புள்ளி வைத்த முக.ஸ்டாலின்..!!

Fri Apr 4 , 2025
Chief Minister M.K. Stalin has announced that scenes related to the Mullaperiyar Dam have been removed from the movie Emburaan.

You May Like