fbpx

ஒரே நாளில் அதிரடியாக ரூ.720 குறைந்த தங்கம் விலை..!! தொடர்ந்து சரிவதால் குஷியில் நகைப்பிரியர்கள்..!!

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும். ஆனால், இந்தியாவில் இதற்கு நேர் எதிர். இங்கு விற்கப்படும் 90 சதவீத தங்கம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை தான். அவை டாலர் மதிப்பில் வாங்கப்படுவதால், தங்கம் விலையில் எப்போதும் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பங்குச் சந்தைகள் அதிரடியாக சரிவை கண்டன. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக பங்குச்சந்தையும் சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.66,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனையாகிறது.

Read More : சீனா போட்ட ஸ்கெட்ச்..!! தவிடுபொடியாக்கிய அமெரிக்கா..!! காதலிக்கவும், உடலுறவு வைத்துக் கொள்ளவும் தடை..!!

English Summary

The price of gold has dropped by Rs. 720 per sovereign, and one sovereign is being sold for Rs. 66,480.

Chella

Next Post

திடீரென வெடித்த தர்பூசணி சர்ச்சை..!! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் அதிரடி பணியிட மாற்றம்..!! சுகாதாரத்துறை உத்தரவு..!!

Sat Apr 5 , 2025
Food Safety Department Officer Satish Kumar has been transferred.

You May Like