fbpx

திடீரென வெடித்த தர்பூசணி சர்ச்சை..!! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் அதிரடி பணியிட மாற்றம்..!! சுகாதாரத்துறை உத்தரவு..!!

தமிழ்நாட்டில் கோடை காலம் ஆரம்பித்ததை முன்னிட்டு தர்பூசணி விற்பனை படு ஜோராக களைக்கட்டியுள்ளது. இந்நிலையில் தான், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் இறங்கினர். அப்போது, அவர்கள் சில கடைகளில் தர்பூசணிகளை ஆய்வு செய்து அகற்றினர். மேலும், அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால், அகற்றப்பட்டதாக தகவல் பரவியது. இதனால், மக்கள் அச்சமடைந்து தர்பூசணி வாங்குவதை தவிர்த்து வந்தனர்.

இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சதீஷ்குமார் இதுகுறித்து விளக்கம் கொடுத்திருந்தார். அதில், “தர்பூசணி பழம் உடலுக்கு மிகவும் நல்லது. சென்னையில் தர்பூசணி பழத்தில் செயற்கை நிறங்கள் கலக்கப்பட்டதாக புகார் வரவில்லை. பொதுமக்கள் கவலையின்றி, தர்பூசணி பழத்தை வாங்கி சாப்பிடலாம். நமது விவசாயிகள் சிறப்பான முறையில் தர்பூசணிகளை சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர்.

சென்னையில் சில இடங்களில் எலி கடித்த பழம், அழுகிய பழங்கள் ஆகியவற்றை மட்டுமே அப்புறப்படுத்தியிருந்தோம். செயற்கை நிறங்களை கலக்கப்பட்டதாக எந்த பழங்களும் அப்புறப்படுத்தவில்லை. உணவு பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எதிரி இல்லை. சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி தற்போது அவர், தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புக்களையும் கவனிப்பார் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Read More : ஒரே நாளில் அதிரடியாக ரூ.720 குறைந்த தங்கம் விலை..!! தொடர்ந்து சரிவதால் குஷியில் நகைப்பிரியர்கள்..!!

English Summary

Food Safety Department Officer Satish Kumar has been transferred.

Chella

Next Post

’சார்.. ரூ.1,500 மட்டும் கொடுங்க’..!! போலீஸையே உல்லாசத்திற்கு அழைத்த கும்பல்..!! அரை நிர்வாண கோலத்தை பார்த்து ஆடிப்போன சப்-இன்ஸ்பெக்டர்..!!

Sat Apr 5 , 2025
The sub-inspector was shocked to see a young woman in a room, half-dressed.

You May Like